பொருளடக்கத்திற்கு தாவுக

தனம் தரும் ஸ்ரீ சக்ர மஹா கால பைரவர் அருள் பெற சேலம் ஊத்துமலை வாருங்கள்

கடவுள்      – தனம் தரும் ஸ்ரீ சக்ர மஹா கால பைரவர்

தனம் தரும் ஸ்ரீ சக்ர மஹா கால பைரவர்

 

தனம் தரும் ஸ்ரீ சக்ர மஹா கால பைரவர் சன்னிதி

 

இடம்        – ஸ்ரீ பாலசுப்பரமண்ய சுவாமி கோவில்,

ஸ்தல மலை என்கிற ஊத்துமலை,

சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மிக அருகில், சேலம்.

போன்                – 0427 – 2281822

 

 

 

பூஜைகள்    –  தேய்பிறை அஷ்டமி பூஜை, பைரவர் ஜென்மாஷ்டமி பூஜை.

அன்னதானம் நடைபெறுகிறது

 

தீபங்கள் – தேங்காய் தீபம், மிளகு தீபம், எள் தீபம், பூசணி தீபம் இப்படி பல வகையான தீபங்கள் அவர்அவர்களின் பிரச்சினைக்கேற்ப ஏற்றி வழிபாடு செய்ய, தலைமைகுருக்களால் வழிகாட்டப்பட்டு பக்தர்கள் நன்மை அடைகின்றனர்

 

திருப்பணிகள் –

1.   பைரவருக்கு தனிக்கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2.   பக்தர்களின் சிரமமின்றி வந்து செல்லும் வசதிக்காக சாலை அகலப்படுத்தப்படுகிறது ,

3.   வாகனங்கள் நிறுத்தி எடுத்துச் செல்வதற்க்கு வசதியாக பிரம்மாண்டமான வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

4.   பக்தர்கள் இறைவன் அருட்பார்வையில் திருமணம் செய்துகொள்ள திருமணமண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது

 

 

தலைமை குருக்கள்  – சிவ ஸ்ரீ S.N.திருஞானசம்பந்த ஈசான சிவாச்சாரியார்

கைப்பேசி எண்       –  94432 45146

 

தலைமை குருக்கள்

 

தலைமை குருக்கள் முகவரி

 

 

 

நிர்வாகம்             – SK CARS, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ,சேலம்.

 

 

 

மிக அருகில் கோவில்கள்      – , லஷ்மி நாராயண திருக்கோவில், திசை மாறிய தக்க்ஷிணாமூர்த்தி, மற்றும் சேலத்தை சுற்றி ஸ்கந்தகுரு கவசம் தந்த ஸ்கந்தஆசிரமம், உடையாப்பட்டி மற்றும் பல  கோவில்களும் உள்ளன.

 

 

 

ஆன்மீக அன்பு உள்ளங்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்,

 

மலைத்தொடர்கள் நிறைந்த மாங்கனி மாநாகராம் ,சேலத்தில் (மாங்கனி)ஞானக்கனிக்குமரன் மலை நின்ற இடமும் சித்தர்களின் தலைவராம், உருவத்தில் சிறுத்தும், தவத்திலும், தன்னடக்கத்திலும், கருணையிலும் உயர்ந்தவருமான தலைமை சித்தர் ஸ்ரீ அகத்திய மாமுனிவர், பிரதிஸ்டை செய்து வழிபட்ட ஸ்ரீசக்கரம் உள்ள ஸ்ரீ சக்கராதேவி ஆலயமும், அவரால் வழிபாடு செய்யபட்ட லிங்கமுமான அருள்மிகு ஸ்ரீ அகஸ்தியலிங்கம் உள்ள திருத்தலமும் மேலும் மூர்த்தி, ஸ்தலம் , தீர்த்தம் என்னும் மூன்று பெருமைகளையும் உடைய உன்னத திருத்தலமாம் ஸ்ரீ பாலசுப்பரமண்ய சுவாமி திருக்கோவில் , தமிழ்நாட்டில், சேலம் , சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகில் உள்ளது.

 

இந்த கோவிலில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தனம் தரும் ஸ்ரீ சக்ர மஹா கால பைரவர் மிகவும் சக்திவாய்ந்தவர். அவரின் அருள் பார்வையினால் நன்மை அடைந்தவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தன்னை காண வரும் பக்தர்களை இன்னல்களில் இருந்து காப்பதில் தாயுமானவராக விளங்குகிறார்.

 

பஞ்ச முக ருட்திராட்சங்கள் கருவறையின் மேற்புறத்தில் வேயப்பட்டுள்ளன

 

 

மிகவும் சக்தி வாய்ந்த பஞ்ச முக ருட்திராட்சங்கள், வேத மந்திர உருவேற்றி, அற்புத சக்தி வாய்ந்த அதிர்வலைகளுடன் ,பைரவருடைய கருவறையின் மேற்புறத்தில் வேயப்பட்டுள்ளன.

 

மேலும் தேய்பிறை அஷ்டமி திதியில் ,மாலை 6.30 மணிக்கு மேல் 108 கலசங்களில் தீர்தங்களுடன்,அக்னி ஹோமம் வளர்க்கப்பட்டு, பின்னர், பாலாபிஷேகம், பன்னீர், சந்தனம்,தேன், தயிர், இதர அபிஷேகங்கள் செய்யப்பட்டு, யாக கலச தீர்த்தத்தில் அபிஷேகம் முடிந்து, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, வாத்தியங்கள் முழங்க , பைரவ அர்ச்சனை செய்யப்படுகிறது.பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது.

 

2012 ன் தேய்பிறை அஷ்டமி தினங்கள்

 

12 ராசிகளும் பைரவரின் அங்கங்களும், அன்னதானத்தின் சிறப்பு

 

இயற்கை நெறிகளில் தீர்வு பெற

 

தற்பொழுது பைரவர் தனது தற்காலிக இடத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கான நிரந்தர ஆலய கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பைரவரை தரிசித்து அருள் பெற,மேலே கொடுக்கப்பட்டுள்ள தேய்பிறை அஷ்டமி தினங்களில் மாலை 6 மணிக்கு நேரில் வந்து பைரவரின் அருள் பெற்று ,வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று வளர்ந்திட,

தலைமை குருக்கள்  –

சிவ ஸ்ரீ S.N.திருஞானசம்பந்த ஈசான சிவாச்சாரியார்

மற்றும் நிர்வாகம்     –

SK CARS, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ,சேலம்.  அவர்களும் அனைவரையும் வரவேற்கின்றனர்.

 

இறைவனை தரிசிக்க வரும் பக்தர்கள் ,கோவில் பக்திப் பணிகளிலும், அன்னதானத்திலும் பங்கு கொண்டு, இறைவனின் அருளுக்கு பத்திரமாகுங்கள் – தலைமை குருக்கள்

 

Hello world!

Welcome to WordPress.com! This is your very first post. Click the Edit link to modify or delete it, or start a new post. If you like, use this post to tell readers why you started this blog and what you plan to do with it.

Happy blogging!